முடிவிற்கு வரும் நித்தியின் ஆட்டம்?... அதிரடியாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்.. கைலாசாவா? கைலாசமா?..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த நித்யானந்தா பெங்களூரை அடுத்துள்ள பிடதி பகுதியில் நித்தியானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வந்தார். இவரின் சொற்பழிவை கேட்ட கோடான கோடி பக்தர்கள் மற்றும் பக்தைகள் ஆதரவு பெருகவே., இவரின் கிளைகளும் இந்தியா முழுவதும் செயல்பட துவங்கியது. இவருக்கு இந்தியாவில் உள்ள பக்தர்கள் மற்றும் பக்தைகளை போலவே வெளிநாட்டு ஆதரவும் பெருகியது. இவரது செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது என்று எண்ணியிருந்த நிலையில்., பகீரென நடிகை ரஞ்சிதாவுடன் குதூகலமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. 

இந்த வீடியோ உண்மை இல்லை என்று இன்று வரை இரட்டை கால்களில் அமர்ந்து சமாளித்து வரும் நிலையில்., அவ்வப்போது பல சர்ச்சை பேச்சுகளும் பேசி இணையதள நெட்டிசன்களிடம் குட்டு வாங்கி சென்றார். இவரை ஒரு குணசித்திர காமடி நடிகராக இணையத்தளத்தில் உருவாக்கி நெட்டிசன்கள் விளையாடி வந்த நிலையில்., பெரும் அதிர்ச்சியாக குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை புகார்கள் எழத்துவங்கியது. இது தொடர்பாக புகார்கள் அடுத்தடுத்து தொடர்ந்து எழவே., காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். அனைவருக்கும் டிமிக்கி கொடுத்து அவ்வப்போது இணையத்தளம் மூலமாக சீடர்களிடையே உரையாற்றி வந்த நிலையில்., கடந்த 8 மாதங்களுக்கு முன்னதாகவே நித்யானந்தா சிஷ்யர்களுடன் வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாக பேசப்பட்டது. 

nithyanandha,

இந்த கூற்றுகளை அவ்வப்போது பதிவிடும் வீடியோ காட்சிகளில் மறுப்பு தெரிவித்து தூணிலும் இருக்கிறேன்., துரும்பிலும் இருக்கேன் என்று சமாளித்து வந்த நிலையில்., தற்போது வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்வலையை காவல்துறையினருக்கு ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டிற்கு தப்பி சென்றுள்ள நித்தியானந்தா தென்னமெரிக்க நாட்டில் உள்ள ஈக்வடார் தீவை விலைக்கு வாங்கி கைலாஸா என்று அறிவித்துள்ளதாக தகவல் வெளியானது. அடுத்தடுத்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகி நித்தியானந்தா எந்தஒருநாட்டையும் வாங்கவில்லை என்று தெரியவந்த நிலையில், நித்தியை கைது செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இருப்பினும் தினமும் வீடியோ மூலமாக தனது சீடர்களுக்கு வரம் கொடுத்து வரும் நிலையில், தற்போது கைலாசா என்ற நாடே இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. போலியான பாஸ்போர்ட்டில் தப்பி சென்றுள்ள நித்தி, அகதியாக பிழைப்பு நடத்தி வருவதாகவும், நிழலுலக தாதாக்கள் உதவியுடன் சிறிய அளவிலான சொகுசு கப்பலை வாங்கி அதில் பயணம் செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், தனி நாடு அல்லது பிற பெரிய நாடுகளுக்கு சென்றால் கட்டாயம் மாட்டிக்கொள்வோம் என்ற காரணத்தால் சொகுசு கப்பலில் உல்லாச வாழ்க்கை நடத்தி வருவதாகவும், நேரலைக்கு தொழில்நுட்பம் தெரிந்த நபர்களை வைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

nithyanandha,

இது ஒருபுறமிருக்க இவரின் மீது பொதியப்பட்ட வழக்குகள் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவரை பிடிப்பதற்கு சர்வதேச காவல் துறையினரின் உதவியை நாட குஜராத் நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், தற்போது "புளூ கார்னர்" சம்மனும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக சர்வதேச காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து, இவரின் அடையாளம் மற்றும் இருப்பிடம் போன்ற தகவல் தெரிந்தால் இந்திய காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதன் அடிப்படையில் சர்வதேச காவல்துறை அதிகாரத்திற்கு உட்பட்டுள்ள சுமார் 150 நாடுகளுக்கு புளூ கார்னர் சம்மன் தொடர்பான தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

விசாரணைக்கு பின்னர் நித்தி தொடர்பான தகவல் அல்லது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்ற வேலையில், நித்தியின் இருப்பிடம் சர்வதேச காவல் துறையினருக்கு தெரியவரும் பட்சத்தில் "ரெட் கார்னர்" சம்மனை பிறப்பிப்பார்கள். நித்தி தொடர்பான விசாரணையில் கியூபா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு இடையேயிருக்கும் கரீபியன் தீவில் பதுங்கியிருக்கலாம் என்றும், அந்நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் "பெலிஸ்" பாஸ்போர்ட்டை வாங்கியிருக்கலாம் என்றும் தகவல் கசிய துவங்கியுள்ளது. இது தொடர்பான விசாரணை தற்போது தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat police want help to international police to arrest nithyananda


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->