பேச்சிலர் பார்ட்டியில் நடந்த களேபரம்.! திருமணத்தன்று மணமகனின் முகத்தை கண்டு பேரதிர்ச்சியில் கதறிஅழுத மணமகள்!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தை சேர்ந்தவர் ஸ்காட் ரிச்சர்ட்ஸ். 31 வயது நிறைந்த இவர் முன்னாள் போலீசாக இருந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து நண்பர்களுக்கு ட்ரீட் கொடுக்க தனது திருமணத்திற்கு முதல் நாள் ஸ்காட் தனது நண்பர்களுடன் சேர்ந்து இரவு பார்ட்டிக்கு சென்று உள்ளார்.

அங்கு மது அருந்திக் கொண்டிருந்த அவர்களிடம் டெய்லர் ப்ளம்ரிட்ஜ்  சென்ற நபர் தானும் உங்களுடன் இணைந்து கொள்ளலாமா என கேட்டுள்ளார். அதற்கு ஸ்காட் ஒத்துக்கொள்ளவே, மது அருந்துவதை போல அமர்ந்த டெய்லர் ஸ்காட் மற்றும் அவரது நண்பர்களின் பணத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்ப முயற்சி செய்துள்ளார். இதனை ஸ்காட் கண்டுபிடித்து திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

இந்த நிலையில் அங்கிருந்து தப்பிக்க டெய்லர் பீர் பாட்டிலை ஸ்காட் முகத்தில் ஓங்கி அடித்துள்ளார்.அதில் ஸ்காட்டின் முகம் முழுவதும் பயங்கர காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்காட்டின் நண்பர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முகத்தில் 14 தையல்கள் போடப்பட்டன.

அதனை தொடர்ந்து மறுநாள் அதிகாலை மருத்துவமனையிலிருந்து  வெளியேறிய ஸ்காட் தனது திருமணம் நடைபெறும் இடத்திற்கு  சென்றுள்ளார்.அங்கு அவரை பலத்த காயங்களுடன் கண்டு மணப்பெண் அதிர்ச்சியில் கதறி அழ தொடங்கியுள்ளார்

அதைத்தொடர்ந்து அவரை சமாதானம் செய்த நிலையில் ஸ்காட்டிற்கு  முக அலங்காரம் செய்யப்பட்டு காயங்கள் மறைக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.  மேலும் ஸ்காட்டை கடுமையாக தாக்கிய டெய்லரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

groom attacked by theif before marriage


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->