இலங்கை ராணுவம் - விடுதலைப் புலிகள் போரில் காணாமல் போன 20,000 தமிழர்களின் கதி - இலங்கை அதிபர் அதிர்ச்சி தகவல்..!  - Seithipunal
Seithipunal


றுதி கட்ட போரில் காணாமல் போன தமிழர்கள் அனைவரும் உயிரிழந்து விட்டதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, ஐநா உயரதிகாரியிடம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2009ம் ஆண்டில் இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது மொத்தம் ஒரு லட்சம் பேர் இறந்ததாகவும், மேலும் 20 ஆயிரம் தமிழர்கள் காணாமல் போனதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், இலங்கைக்கு வருகை புரிந்துள்ள ஐ.நா. உயரதிகாரி ஹனாஸ் சிங்கரிடம், இறுதிகட்ட போரின் போது காணாமல் போன 20000 தமிழர்கள் இறந்துவிட்டதாக கோத்தபய ராஜபக்சே தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அன்றைய போரின் போது பெரும்பாலானோரை விடுதலை புலிகள் கட்டாயப்படுத்தி கடத்தி சென்று அவர்களது படையில் இணைத்து கொண்டதாகவும், அதற்கு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரே சான்று எனவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், உரிய விசாரணைகள் முடிந்தவுடன் காணாமல் போனவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்படும் என்று கோத்தபய தெரிவித்திருக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gotabaya rajapaksa about 20000 thamilans


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->