இங்கிலாந்து மகாராணியின் இறப்புக்கு கூகுள் நிறுவனம் என்ன செய்தது தெரியுமா.?!  - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து மகாராணியின் இறப்புக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கூகுள் நிறுவனம் கூகுள் தேடுபொறியின் நிறத்தை சாம்பல் நிறமாக மாற்றியுள்ளது.

எலிசபெத் இறந்த நாளில் ஐக்கிய ராஜ்ஜியத்தின் கூகுள் சாம்பல் நிறமாக காட்சியளித்தது. இன்று இந்தியாவில் கூகுள் முகப்பு எழுத்துக்கள் சாம்பல் நிறத்தில் காணப்படுகின்றன. இன்று இந்தியா ஒரு நாள் அரசு துக்கத்தை ராணி மறைவை ஒட்டி அனுசரிக்கிறது.

இதன் காரணமாக, நாடு முழுவதும் அரை கம்பத்தில் தேசியக்கொடி பறக்க விடப்பட்டது. சாம்பல் நிறத்தின் லோகோ அனைத்து விதமான சாதனங்களிலும் தெரியும். ஆனால், இந்த லோகோவை யாராலும் கிளிக் செய்ய முடியாது. பிரபலமானவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட லோகோவை கூகுள் டூடுல்களில் மாற்றியமைக்கும் நடைமுறையை கொண்டது.

அந்த வகையில், பிரபலமானவர்களின் பிறந்தநாள் அல்லது இறந்த நாட்களில் அவர்களை நினைவு கூறும் வகையில் டூடுலை கூகுள் மாத்தி அமைக்கும். தற்போது, இங்கிலாந்து மகாராணியின் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் இந்த டூடூலை வெளியிட்டு இருக்கிறது. இது குறித்து கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Google Condolences for england Queen


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->