2021 வருடத்திலும் சில மாதங்கள் ஊரடங்கு தொடரும் - வெளியான அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,573,223 ஆக உயர்ந்துள்ளது. 1,458,309 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். 43,194,059 பேர் பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். 

உலகளவில் பெரும்பாலான நாடுகள் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து குறைந்தளவு விடுபட்டு இருந்தாலும், இரண்டாவது அலையை எதிர்கொள்ளும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனியும் ஒன்றாக இருக்கிறது. 

ஜெர்மனியில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 1,041,970    ஆக உயர்ந்துள்ளது. 16,377 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். அங்கு நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 15 ஆயிரம் பேரில் இருந்து 20 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

மேலும், தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், கொரோனாவிற்கு எதிரான கட்டுப்பாடுகள் 2021 ஆம் வருடத்திலும் செயல்பாட்டில் இருக்கும் என்றும், 2021 வருட துவக்கத்தில் உள்ள சில மாதங்களில் கொரோனா பரவலை பொறுத்து இது கடுமையாக மாறலாம் என்றும் ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Germany Govt Announce 2021 Lockdown Extend due to Corona Spread


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->