ஸ்பெயின்! சரக்கு ரயில் தடம் புரண்டு எதிரே வந்த பயணிகள் ரயில் மீது மோதி விபத்து.! - Seithipunal
Seithipunal


ஸ்பெயின் நாட்டில் சரக்கு ரயில் தடம் புரண்டு எதிரே வந்த பயணிகள் ரயில் மீது மோதி விபத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனாவிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாண்ட் போய் நகரில் உள்ள ரயில் நிலையத்திற்கு, பொட்டாஷ் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டு எதிரே வந்த பயணிகள் ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ரயில் எஞ்ஜின் ஓட்டுனர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். மேலும் 85 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு பணியினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Freight train collides with passenger train


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->