இப்படி ஒரு உணவகத்தை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது.!  - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் செயல்படும் இந்த உணவகம், பசியுடன் வரும் ஏழை மக்களுக்கு இலவச மதிய உணவு வழங்கி பிரபலமடைந்து வந்துகொண்டு இருக்கிறது.

அமெரிக்காவின் பிரெவட்டன் என்னும் நகரில் ‘Drexell & Honeybee’ என்ற உணவகம் கடந்த 2018ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்துள்ளது.  இந்த உணவகத்திற்கு உரிமையாளரான லிசா தாமஸ் மெக்மில்லன், தனது கணவர் மற்றும் மற்றொரு முதலாளியான பிரட்டீ மெக் மில்லன் ஆகியோருடன் இணைந்து மதிய வேளையில் ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக சுட சுட சுவையான உணவு வழங்கி வருகிறார்கள்.

இவரது உணவகத்தில் ஆர்டர் செய்யும் எந்த உணவுக்கும் விலை இல்லை என்பதால், ஏழைகள், முதியவர்கள் மட்டுமல்லாது, பலரும் வந்து உணவு உண்டு செல்கின்றனர். அதற்கு பதிலாக சிலர் 360 ரூபாய் வரை அங்கிருக்கும் நன்கொடை பெட்டியில் இட்டு செல்வார்கள்., மேலும் சிலர் வீட்டில் விளைவிக்கப்படும் காய்கறி போன்ற பொருட்களையும் வழங்கி செல்வார்கள் என்று தெரிவித்துள்ளார்கள். 

எந்த ஒரு லாபமுமின்றி இந்த உணவகத்தை நடத்தி வரும் மெக்மில்லன் தம்பதி இதுபற்றி கூறுகையில், ஏழைகளுக்கு உணவளிப்பது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன், கல்லூரியில் இலவச உணவகம் நடத்தி வந்ததாக தெரிவித்த மெக்மில்லன், அதன் பின் முதியவர்களும் வந்து செல்லவே, அவர்களும் பயன்பெறும் வகையில் இந்த உணவகத்தை தொடங்கி நடத்தி வருவதாக கூறுகிறார்கள்.

மருந்துகளுக்கு கூட போதிய பணம் இன்றி அவதிப்படும் முதியவர்களே தங்களது உணவகத்தை அதிகம் நாடுவதாக கூறும் அவர், இந்த உணவகம் பிரபலமானதற்கு பின் பலரும் மின்னஞ்சல் மூலம் தினந்தோறும் நன்கொடை வழங்கி வருகின்றனர் எனவும், சிலர் சுமார் 70,000 ரூபாய் வரை நன்கொடை வழங்கி செல்வதாகவும் தெரிவிக்கிறார்.

உணவகத்தின் மூன்று உரிமையாளர்களும் தங்களது ஓய்வூதியத்தை வைத்து, இந்த உணவகத்தை சேவை அடிப்படையில்  நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

free food in hotel for poor people


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->