அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனுக்கு கொரோனா தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அதிபர் பில் கிளிண்டன்(76) அமெரிக்காவின் 42வது அதிபராக கடந்த 1993ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். இதற்கு முன் இவர் ஆர்கன்சஸ் மாநிலத்தின் ஆளுநராக இருந்தார். இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. எனக்கு லேசான அறிகுறிகள் இருந்தது, ஆனால் தற்போது நான் நன்றாக இருக்கிறேன் மற்றும் வீட்டில் என்னை தனிமையில் வைத்திருக்கிறேன்.

மேலும் கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்தியதால் எனக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குளிர்கால மாதங்கள் வர உள்ளதால் அனைவரும் தடுப்பூசி செலுத்தும் படி வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former US president bill Clinton tests positive for Covid


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->