கடலுக்குள் விழுந்து நொறுங்கிய விமானம்!! வைரலாகப் பரவி வரும் வீடியோ!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் இயந்திரக் கோளாறு காரணமாக கடலுக்குள் விழுந்த விமானத்தில் இருந்த பயணி ஒருவர் கடலுக்குள் தத்தளிப்பதையும், பின்னர் மீட்கப்படுவதையும் செல்ஃபியாக எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ அருகே உள்ள ஹாப்மூன் வளைகுடா பகுதியில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் கடலுக்குள் பாய்ந்து விழுந்தது. இதையடுத்து விமானத்தில் இருந்த விமானியும் , நான்கு பயணிகளும், கடலுக்குள் மூழ்கியபடி தத்தளித்தனர்.

அந்த விமானத்தில் பயணம் செய்த டேவிட் லேஷ் என்ற இளைஞர் விமானம் விபத்துக்குள்ளாகி தத்தளிப்பதை செல்ஃபி வீடியோவாக எடுத்தார். இதையடுத்து விபத்து குறித்து தகவலறிந்த மீட்புப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் விமானி மற்றும்  நான்கு பயணிகள் உள்ளிட்ட அனைவரையும் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போதும் டேவிட் செல்ஃபி வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

flight crash video


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->