அமெரிக்கா : முதல் முறையாக பறவை காய்ச்சலுக்கு 5 கோடி பறவைகள் பலி.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டின் வேளாண் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, " அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக நடப்பு ஆண்டில் பறவை காய்ச்சலுக்கு, 5 கோடியே 5 லட்சத்து 40 பறவைகள் உயிரிழந்துள்ளன. 

இந்த பறவை காய்ச்சலில் பண்ணை மற்றும் பண்ணை அல்லாத பறவைகளும் அடங்கும். பறவை காய்ச்சலால் கோழிகள், வான்கோழிகள் மற்றும் பிற பறவைகளின் உயிரிழப்பு, இந்த நாள் வரையில் அமெரிக்காவில் மிக மோசம் வாய்ந்த விலங்கு சுகாதார பேரிடராக கருதப்படுகிறது. 

இதற்கு முன்பு, கடந்த 2015-ம் ஆண்டில் பறவை காய்ச்சலுக்கு 5 கோடியே 5 லட்சம் பறவைகள் உயிரிழந்தது, அதிக அளவாக இருந்தது. அதனை இந்த பாதிப்பு எண்ணிக்கை முறியடித்துள்ளது. 

கோழி பண்ணைகளில் ஒரு கோழிக்கு பாதிப்பு உறுதியானால் அங்குள்ள 10 லட்சம் கோழிகளும் அழிக்கப்படும். இந்த அழிவுகளால், கோழி முட்டைகள் மற்றும் கோழிகளின் விலை அதிகரித்தது. அதனால், நுகர்வோர்களுக்கு பொருளாதார வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதனால், கடந்த வியாழக்கிழமை அமெரிக்காவில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கொண்டாட்டங்களில் நுகர்வோர் பெரிதும் பாதிப்படைந்தனர். இதற்கு முன்னதாக அமெரிக்காவில் பறவை காய்ச்சல் கடந்த பிப்ரவரியில் தொடங்கியது. 

அதன் பின்னர் இந்தக் காய்ச்சல் 46 மாகாணங்களில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. வான்கோழி பண்ணைகள் 70 சதவீதத்திற்கும் கூடுதலான அளவுக்கு காய்ச்சல் பாதிப்புகளை எதிர்கொண்டன" என்று அந்த அறிவிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five crores birds died in america for bird fever


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->