தீப்பிழம்புகளுக்கு இடையே சிக்கி கொண்ட தீயணைப்பு வீரர்களின் வாகனம்..!  - Seithipunal
Seithipunal


யற்கையின் சீற்றத்திற்கு முன் உலக மக்கள் அனைவரும் அடங்கி தான் செல்ல வேண்டும். இயற்கை தரும் அழகினை காட்டிலும் அது தரும் அழிவானது அதிக தாக்கத்தை உண்டாக்கும். இயற்கை நினைத்து விட்டால் நொடிப்பொழுதில் இந்த உலகத்தையே அழித்து விடக்கூடிய அதீத சக்தி அதனிடம் உள்ளது.

அந்த வகையில், ஆஸ்திரேலிய தீயணைப்பு வீரர்கள் சென்ற வாகனம், தீப்பிழம்புகளைக் கக்கும் புதர்த் தீயிக்கு இடையில் கடுமையாக சிக்கிக்கொண்டது, அந்த போராட்டத்தின் பரபரப்பு வீடியோ காட்சி வெளியாகி இருக்கிறது.

சிட்னியில் இருந்து 160 கிலோ மீட்டருக்கு தெற்கில் இருக்கும் நவ்ராவில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களின் வாகனம் புதர்த் தீயில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால், தீ சுழன்று அடிக்க, தீப்பொறிகள் சுற்றிலும் பறப்பதை வாகனத்தில் இருந்த தீயணைப்பு வீரர்களில் ஒருவர் வீடியோ எடுத்து அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதை தொடர்ந்து, இந்த திகிலூட்டும் சூழலில் இருந்து அதிர்ஷ்டவசமாக அந்த வீரர்கள் உயிர் தப்பியதாகவும் தீயணைப்பு வீரர் அதில் தெரிவித்திருக்கிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

firefighters stuck in the flame of fire


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->