அமெரிக்கா: பெண் நீதிபதி, கணவர் மர்மமுறையில் வீட்டில் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள பெர்னாலில்லோ கவுன்டி பகுதிக்கு உட்பட்ட ஆல்புகுர்கு நகர் பகுதியில் வசித்து வருபவர் பெண் நீதிபதி டையானே ஆல்பர்ட் (65). இவரது கணவர் எரிக் பின்கர்டன்(63).

இந்நிலையில் இவரது வீட்டில் திடீரென வளர்த்து வந்த செல்லப் பிராணிகள், டையானே ஆகியோர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்து கிடந்துள்ளது. மேலும் டையானேவின் கணவரும் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் முதற்கட்ட விசாரணையில், மனைவி மற்றும் வளர்ப்பு பிராணிகளை கணவர் எரிக் சுட்டுக்கொன்று விட்டு தற்கொலை செய்து இருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

மேலும் போலீசார் பெண் நீதிபதி மற்றும் அவரது கணவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து, தீவிரமாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Female judge husband mysterious death at home in America


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->