தலிபானுக்கு ஆதரவாக பதிவிட்டால் முகநூல் கணக்கு நீக்கப்படும் - பேஸ்புக் நிறுவனம் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் நாட்டினை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றிய நிலையில், உலக நாடுகள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இஸ்லாமிய அடிப்படை சித்தாந்தத்தில் தீவிரமாக இருக்கும் தலிபான் பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தான் நாட்டினை என்ன செய்யப்போகிறார்கள் என ஆப்கானிய மக்கள் முதல் உலக நாடுகள் அவரை அச்சப்பட்டு உள்ளனர். 

ஏற்கனவே தலிபான்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளும் இருக்கும் நிலையில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் உட்பட அனைத்து வன்முறையும் ஆப்கானிஸ்தானில் அதிகரிக்கலாம், குறிப்பாக ஊடகத்துறையில் உள்ள பெண்களின் மீது பாலியல் ரீதியான வன்முறை கட்டவிழ்த்துவிடப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஏற்கனவே வீடு வீடாக தலிபான்கள் சோதனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 

தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் நடத்தி வந்த ஆயுத போரினால் பல அப்பாவி மக்களில் இருந்து அரசு அதிகாரிகள் வரை உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் வன்முறை போக்குக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டமும் இருந்து வருகிறது. ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றிய விவகாரத்தில், சமூக வலைத்தளங்களில் தமிழகத்தில் இருக்கும் இஸ்லாமியர்கள் சிலர் தாலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளையும் பதிவு செய்தனர். 

தமிழகத்தில் தாலிபான்களுக்கு ஆதரவாக செயல்படும் அல்லது ஆதரவாக கருத்துக்களை வெளியிடும் நபர்களை மத்திய உளவுத்துறை கண்காணிக்கிறது என மத்திய அரசு தகவலை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் சிலர் ஆப்கானிஸ்தானின் ஆட்சியை தலிபான் கைப்பற்றியதற்கு ஆதரவு கருத்துக்கள் தெரிவித்து வருவதாக புகார்கள் எழுந்த நிலையில், மத்திய உளவுத்துறை இதனை கண்காணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலிபான்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகநூல் கணக்குகள் முடக்கப்படும். தாலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்து பதிவிடும் கருத்துக்கள் என எந்த விதமான ஆதரவும் முகநூலின் சட்ட விதிகளுக்கும், அமெரிக்காவின் சட்ட விதிகளுக்கும் எதிரானது. தாலிபான்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் கணக்குகள் அனைத்தும் முடக்கப்படும், நீக்கப்படும் என முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Facebook Warn about Taliban Support Posted Accounts are Disable or Closed by FB


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->