பேஸ்புக் நிறுவனம் விதிமீறல்.! 3 லட்சம் கோடி அபராதம்.!! - Seithipunal
Seithipunal


பேஸ்புக் நிறுவனம் விதிமுறைகளை மீறியதாகவும்  தனிநபர் தகவல்களை பகிர்ந்ததாகவும் அந்த நிறுவனத்திற்கு அமெரிக்க வர்த்தக மையம் சுமார் 3 லட்சம் கோடி அபராதம் விதித்துள்ளது. கேம்பிரிட்ஜ்  அனாலிட்டிக்கா  என்ற அரசியல் ஆலோசனை நிறுவனத்திற்கு பயனர்களை பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனம் பகிர்ந்து உள்ளதாக புகார்கள் எழுந்தது.

தகவல்களை அனாலிட்டிக்கா  நிறுவனம் திருடியதை ஒப்புக் கொண்ட பேஸ்புக் நிறுவனம் அதற்காக மன்னிப்பு கேட்டது. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த புகார் தொடர்பான விசாரணையை அமெரிக்க வர்த்தக ஆணையம் தொடங்கியது. இதில் அவர்கள் தனிப்பட்ட தகவல்களை பகிர  போவதில்லை என 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடன்பாடுகளுக்கு எதிராக பேஸ்புக் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அந்நிறுவனத்திற்கு சுமார் 3 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது பேஸ்புக் நிறுவனத்தில் கடந்த ஆண்டு வருமானத்தில் இருந்து விடுபட்டு அதில் 9% அபராதமாக விதித்துள்ளது  ஒரு தொழில்நுட்ப நிறுவனத்திற்கு இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக விதிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Facebook company infringement. 3 lakh crore in fines.


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->