17 வருடமாக குகையில் வனவாச கொண்டாட்டத்தில் கைதி.! லபக்கென்று பிடித்த காவல் துறை.!! - Seithipunal
Seithipunal


சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள யுனான் மாகாணம், யோங்‌ஷான் நகரை சேர்ந்தவர் சாங் சியாங். இவர் பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்திய வழக்கில் 2002-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார், பின் சிறையில் அடைக்கப்பட்டு வைத்திருந்தார். ஆனால் சில நாட்களில் அவர் சரியாக திட்டமிட்டு சிறையில் இருந்து தப்பித்தார். அதன் பின்னர் பல இடங்களில் தேடினார்கள் ஆனால் அவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

17 ஆண்டுகளுக்கு பிறகு சாங் சியாங், யோங்‌ஷான் நகரில் உள்ள ஒரு மலைப்பகுதியில் பதுங்கி உள்ளார் என்று கடந்த மாத இறுதியில் போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று வந்தது. இதனால் போலீசார் தேடுதல் வேட்டையை நிறுத்தி விட்டனர்.

சாங் சியாங்கை தேடுவதற்காக கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லா குட்டி விமானம் ஒன்றை மலைப்பகுதிக்கு பறக்க விட்டு தேடி வந்தனர். அப்போது, மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள குகையில் மனிதர்கள் பயன்படுத்தும் சில பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனால் போலீசார் நேரடியாக அந்த இடத்துக்கு சென்று சோதனை செய்தார்கள்.

அப்போது குகையில் பதுங்கியிருந்த சாங் சியாங் பிடிபட்டார். மலைகளுக்கு நடுவே உள்ள குகையை வீடாக பயன்படுத்தி, மற்றும் ஆற்று நீரை பயன்படுத்திகொண்டு, மரங்களை வெட்டி நெருப்பை உண்டாக்கி காட்டில் கிடைத்தவற்றை சமைத்து சாப்பிட்டு ஒரு காட்டுவாசி போலவே வாழ்த்திருக்கிறார். 17 வருடங்களுக்கு பிறகு பிடிபட்ட சாங்கை போலீசார் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Escaped prisoner takes refuge in cave for 17 years


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->