உலகத்திற்கே பாடம் கற்பித்து கொடுக்கும் இந்தியா.. இங்கிலாந்து இளவரசர் கவுரவம்.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டின் தலைநகரான இலண்டனில் "இந்திய குளோபல் லீக்" என்ற உலகளாவிய இந்திய வார உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், இங்கிலாந்து நாட்டின் இளவரசர் சார்லஸ் காணொளி மூலமாக பங்கேற்றுள்ளார். 

இதில் அவர் பேசுகையில், இந்தியாவின் வாழ்க்கை முறைகளை பெருமைப்படுத்தியுள்ளார். மேலும், நிலையான எதிர்காலத்தை உருவாக்குவது எப்படி என்று உலகம் இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், இன்றுள்ள சூழலில் கொரோனாவின் நெருக்கடியில் இருந்து உலகை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். நிலையான வாழ்க்கையின் முக்கியத்துவம் தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேசினேன். 

தன்னைத்தானே உலகம் புதுப்பித்துக்கொள்ளும் போது, இந்தியாவிடம் இருந்து நற்குணம் மற்றும் பேராசைத்தன்மை இல்லாதது போன்றவற்றை கற்றுக்கொள்ள வேண்டும். பண்டைய கால யோக ஞானத்தை கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இதுவேயாகும்.

எந்த விதமான சூழ்நிலையிலும் இந்தியா மேற்கூறியவற்றை புரிந்துகொண்டு இருக்கிறது. இந்தியாவின் தத்துவம் மற்றும் மதிப்புகள் நிலையான வழியை அடைய வலியுறுத்துகிறது. இங்கிலாந்து நாட்டிற்கு புலம்பெயர்ந்துள பல இந்திய சமூகத்தாருடன் மற்றும் உறுப்பினர்களுடன் விவாதம் நடத்தி இருக்கிறேன். அதில் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் இந்தியாவின் பங்களிப்பு இலட்சியத்தால் நான் பெரிதும் ஊக்குவிக்கப்படுகிறேன் என்று கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England Prince Greetings to India


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->