8 வருடத்திற்கு முன்பு போட்ட டுவிட்! கிரிக்கெட் வீரரின் அசத்தலான அறிமுகம் அலங்கோலமான சோகம்!  - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து இங்கிலாந்து அணிகள் இடையேயான லண்டன் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. போட்டிகள் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய நியூசிலாந்து அணி, இங்கிலாந்து அணிக்கு 273 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இங்கிலாந்து அணி இலக்கை எட்டும் முன்னரே ஐந்தாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்த்தால், போட்டியானது சமனில் முடிந்தது.

இந்த நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து சார்பாக அறிமுகமான டெவோன் கன்வாயும், இங்கிலாந்து சார்பில் அறிமுகமான ராபின்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முத்திரை பதித்தார்கள். அதுவும் குறிப்பாக இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் இராபின்சன் முதல் இன்னிங்க்சில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதை அடுத்து, அவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவுகள் றெக்கைகட்டி பறந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். ஆனால் அன்று மாலையே ரசிகர்களால் மீண்டும் கழுவி கழுவி ஊற்றப்பட்டடார் ராபின்சன். 

அதற்கு காரணம் அவர் சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பாக இனவெறி ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் பதிவு செய்த டுவிட்டால் தான் என்பது தெரியவந்தது. அதற்கு உடனடியாக மன்னிப்புக் கோரிய ராபின்சன், தொடர்ந்து இந்த ஆட்டத்தில் விளையாடிய முதல் இன்னிங்சில் 42 ரன்களையும் அடித்து இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கை அளித்தார். மேலும் இரண்டாவது இன்னிங்க்சில் பந்து வீசும்போது, மேலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

இந்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்திய வேல்ஸ் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரது விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும் அவரது மன்னிப்பையும் ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்து விட்டது. இந்த நிலையில் அவர் தான் ட்விட்டரில் பதிவு செய்து உள்ளார் என்பது உறுதி ஆனது. அவர்கள் ஏழு மாதகாலம் கிரிக்கெட் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டதாக அறிவித்துள்ளனர். அறிமுக போட்டியிலேயே அசத்தினாலும் அவருடைய பழைய சமூக வலைதள பதிவு அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையே கேள்விக்குறியாகி நிற்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England player Ollie Robinson suspended from international cricket by ECB for racist ttweet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->