வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்துவதாக கூறி, சொந்த வீட்டை தீக்கு இரையாக்கிய காதலன்.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டில் உள்ள தெற்கு யாரஃஷிரின் மாகாணத்தில் உள்ள அபேதலி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மார்க். இவரது நீண்டகால தோழி பெயர் ரியா. இருவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த சமயத்தில், மார்க்கிற்கு தனது காதலியிடம் காதலை தெரிவிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது. 

இந்த காதல் மிகவும் ஆச்சர்யமூட்டும் வகையில் இருக்க வேண்டும் என்றும் எண்ணிய நிலையில், நேற்று இரவு வீட்டினை பூக்களால் அலங்காரம் செய்து, மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துள்ளார். தனது காதலி வரும் போது வீடே ஜொலிக்க வேண்டும் என்று பலத்த ஏற்பாடுகளை செய்த நிலையில், தனது காதலி ரியாவை அலுவலகத்தில் இருந்து அழைத்து வர சென்றுள்ளார்.

மார்க் காரில் புறப்பட்டு சென்ற சில மணித்துளிகளை உள்ளாகவே, மெழுகுவர்த்தியை இருந்து தீ வீடுமுழுவதும் பற்றிக்கொண்டு எரிந்துள்ளது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 

இதனை அறியாத மார்க் தனது காதலி ரியாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வரவே, வீடு தீக்கு இறையாகியுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மார்க், சற்றும் தளராது தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார். வீடு ஒருபுறம் தீப்பற்றி எரிய, மற்றொரு புறம் மார்க்கின் காதல் வெளிப்பாடு என செய்வதறியாது ரியா திகைத்து நின்றுள்ளார். 

பின்னர் சில வினாடிகள் கழித்து காதலை ஏற்றுக்கொண்ட ரியா, தானும் காதலிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து இருவரும் அன்பை பரிமாறிக்கொண்டனர். தம்பதிகள் இருவருக்கும் தீயணைப்பு படையினர் வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு தீயணைப்பு படையினர் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த விஷயத்தை தெற்கு யாரஃஷிரின் தீயணைப்பு படையினர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து, திருமண அழைப்பிதழுக்காக காத்திருப்பதாக கூறியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England Love Proposal house burned by Boy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->