ஊரடங்கை மீறியது யார்?.. ஆய்வில் வெளியான ருசிகர தகவல்.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டில் ஊரடங்கு விதிகளை அதிகளவு மீறியது யார்? என்பது தொடர்பான ஆய்வானது மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு குறித்த தகவலை அந்நாட்டு ஷெப்பீல்டு மற்றும் அல்ஸ்டர் பல்கலைக்கழகம் ஆய்வை மேற்கொண்டுள்ளது.

இந்த விஷயம் குறித்து 13 வயது முதல் 24 வயது வரை இருக்கும் 2 ஆயிரம் நபரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு இருந்துள்ளது. இந்த கேள்விகளில் 19 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டு இருக்கும் இளைஞர்களில், 50 விழுக்காடு நபர்கள் ஊரடங்கை மீறி இஷ்டம் போல வெளியே சுற்றியதாக தெரிவித்துள்ளனர். 

இதனை தாங்கள் மேற்கொண்ட சாகச முடிவு என்று பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்ட நிலையில், 5 விழுக்காடு நபர்கள் காவல் துறையிடம் சிக்கி அபராதமும் செலுத்தியுள்ளனர். இதில் 25 விழுக்காடு இளம்பெண்களும் அடங்குவார்கள் என்ற தகவலும் தெரியவந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England curfew amid violent persons


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->