இங்கிலாந்தில் பரிதாபமாக உயிரைவிடும் நபர்கள்.. பட்டியலில் முதல் ஆளாக இந்தியர்கள்.!!   - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் தாக்கத்தில் இங்கிலாந்தில் பலியான நபர்களின் எண்ணிக்கை கடந்த 17 ஆம் தேதி நிலவரப்படி 13 ஆயிரத்து 918 ஆக இருந்துள்ளது. இவர்களில் இனவாரியாக பலியான நபர்களின் பட்டியலை இங்கிலாந்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

பலியான நபர்களின் விபரப்படி சும்மர் 16.2 விழுக்காடு நபர்கள் சிறுபான்மையினர் என்றும், இவர்களில் அதிகபட்சமாக 3 விழுக்காடு நபர்கள் இந்திய வம்சாவளியை சார்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக 2.9 விழுக்காடு நபர்கள் கரிபியன் நாட்டை சார்ந்தவர்கள் என்பதும், 2.1 விழுக்காடு நபர்கள் பாக்கிஸ்தான் நாட்டை சார்ந்தவர்கள் என்பதும், 1.9 விழுக்காடு நபர்கள் ஆப்பிரிக்கர்கள் என்பதும், 0.4 விழுக்காடு நபர்கள் சீன நாட்டினை சார்ந்தவர்கள் என்பதும், 0.6 விழுக்காடு நபர்கள் வங்கதேசத்தை சார்ந்தவர்கள் என்பதும், 0.9 விழுக்காடு நபர்கள் பிற கருப்பின நபர்கள் என்பதும், 1.9 விழுக்காடு நபர்கள் இதர ஆசிய நாட்டினை சார்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

கரோனாவிற்கு பலியாகியுள்ள தேசிய சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை 69 ஆக இருக்கும் நிலையில், இந்த இறப்பு பட்டியலிலும் சிறுபான்மையினர் அதிகளவு உள்ளனர். இந்த பட்டியலில் இந்திய மருத்துவர் மஞ்சீத்சிங் ரியாத் இருகிறார். 

இங்கிலாந்து நாட்டினை பொறுத்த வரையில் சிறுபான்மை மக்கள்தொகை 13 விழுக்காடாக இருக்கும் நிலையில், கரோனா பலி எண்ணிக்கை 16.2 விழுக்காடாக இருக்கிறது. சிறுபான்மையினரை பொறுத்த வரையில் இதய கோளாறு, நீரிழிவு பிரச்சனை, வைட்டமின் குறைபாடு மற்றும் மரபணு கோளாறு போன்ற உடல் பிரச்சனைகள் இருப்பதாகவும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதததால் பலி விகிதம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England corona death ration list about community


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->