13 நேர பயணத்திற்கு பிறகு புறப்பட்ட இடத்திலேயே தரையிறங்கிய எமிரேட்ஸ் விமானம் காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


கடந்த வெள்ளிக்கிழமை எமிரேட்ஸ் விமானம் ஒன்று துபாய் விமான நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்துக்கு புறப்பட்டது. நீண்ட தூரம் பயணம் செய்யும் விமானமான இதன் பயண தூரம் சுமார் 16 மணி நேரம் ஆகும். 

இந்த நிலையில், ஆக்லாந்து நோக்கி புறப்பட்ட இந்த விமானம் பாதி தூரத்தை கடந்திருந்த நிலையில், நியூசிலாந்து நாட்டில் பெய்துவரும் கனமழையினால், ஆக்லாந்து விமான நிலையத்தில் வெள்ளநீர் புகுந்து விமானத்தை தரையிறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 

இதையறிந்த விமானி, ஆக்லாந்து விமான நிலைய ஓடுதளம் வெள்ளநீரால் சூழ்ந்துள்ளதாகவும், விமானத்தை தரையிறக்க முடியாதது குறித்தும் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, விமானி, விமானத்தை தரையிறக்க முடியாததால் மீண்டும் துபாய் நோக்கி விமானத்தை இயக்கினார். மேலும் சில மணி நேர பயணத்திற்கு பிறகு விமானம் துபாய் விமான நிலையத்திலேயே தரையிறங்கியது. 

மொத்தம் 13 மணி நேரம் பயணம் செய்த இந்த விமானம் புறப்பட்ட விமான நிலையத்திலேயே மீண்டும் தரையிறங்கியுள்ளது. மேலும், ஆக்லாந்தில் நிலைமை சற்று சீரடைந்ததையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை எமிரேட்ஸ் விமானம் மீண்டும் துபாயில் இருந்து புறப்பட்டு, ஆக்லாந்தில் பத்திரமாக தரையிறங்கியது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

emirets flight flies thirteen hours lands at same place


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->