ஊரடங்கு உத்தரவு அவசரம்..! கார்கள் அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட உயிர் பலிகள்.! - Seithipunal
Seithipunal


உயிர்கொல்லி நோயாக உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா எகிப்து நாட்டிலும் பரவியுள்ளது. இந்த கொடூர வைரஸிற்கு 21 பேர் உயிரிழந்துளளனர். 500 க்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த வைரஸை கட்டுக்குள் வைக்க எகிப்து அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று முன்தினத்தின் போது அங்கு ஊரடங்கு உத்தரவு அமலானது. இதனால் பாக்தாத் நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பேருந்துகள், கார்கள் போன்றவை அணிவகுத்து நின்றது. 

இந்த நேரத்தில், லாரி தன் முன்னாள் நின்று கொண்டு இருந்த காரின் மீது பலமாக மோதியுள்ளது. இதனையடுத்து அடுத்தடுத்து 14 வாகனங்கள் மோதிக்கொள்ள பெரும் விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கார்கள் அனைத்தும் அப்பளம் போல நொறுங்கியுள்ளது. இதனைத்தவிர்த்து 18 பேர் காயமடைந்த நிலையில், அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Egypt curfew accident


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->