கிழக்கு இந்தோனேசியாவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


கிழக்கு இந்தோனேசியாவில் 7.2 ரிக்டர் அளவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது வடக்கு மலுகு மாகாணத்தில் டோபெலோவின் வடமேற்கே 150 கிலோமீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 60 கிலோமீட்டர் (37.2 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சில வினாடிகளுக்கு நீடித்த நிலநடுக்கத்தால் டோபெலோ மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் இந்தோனேசியாவின் வானிலை மற்றும் புவி இயற்பியல் மையம் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. கடந்த 2018ஆம் ஆண்டு சுலவேசியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சுமார் 4,340 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake hits eastern Indonesia


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->