மசூதியாக மாற்றப்படும் பாரம்பரிய சின்னம்! உலகெங்கும் தலைவிரித்தாடும் மதவெறி! - Seithipunal
Seithipunal


ஒரு பக்கம் அன்பை போதிக்கும் மதங்கள் மறுபக்கம் இதர மதங்களை ஒழித்துக்கட்டுகின்றன. அந்த வகையில், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஒரு காலத்தில் கிறிஸ்தவ தேவாலயமாகவும் பின்னர் மசூதியாகவும் இருந்து, பின்னர் பாரம்பரிய சின்னமாக மாற்றப்பட்ட ஹேகியா சோபியா எனும் பழமைவாய்ந்த கட்டிடத்தை இப்போது மீண்டும் மசூதியாக மாற்றியுள்ளது துருக்கி அரசு.

"ஹேகியா சோபியா"

கிறிஸ்தவ மதம் ஒரு அமைப்பாக மாறியது கான்ஸ்டண்டினோப்பிள் எனப்பட்ட இஸ்தான்புல் நகரில் தான். இங்கு கி.பி. 532 ஆம் ஆண்டில் ஹேகியா சோபியா எனும் இந்த தேவாலயம் எழுப்பப்பட்டது. "இறைவனின் தூய ஞானத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தலம்" என்கிற பொருளில் "ஹேகியா சோபியா" (புனித ஞானம்) எனும் கிரேக்க பெயர் சூட்டப்பட்டது.

ஹேகியா சோபியா தேவாலயம் கட்டப்பட்ட காலத்தில் இஸ்லாம் என்கிற மதமே உருவாகியிருக்கவில்லை. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு உலகின் மிகப்பெரிய கிறிஸ்தவ தேவாலயாமாக ஹேகியா சோபியா இருந்தது. கி.பி. 1453 ஆம் ஆண்டில் இஸ்தான்புல் நகரை முஸ்லிம் ஓட்டோமான் சுல்தான்கள் கைப்பற்றி அதனை மசூதியாக மாற்றினர்.

பின்னர் கி.பி. 1934 ஆம் ஆண்டில் துருக்கியின் மன்னராட்சி வீழ்த்தப்பட்டு, ஜனநாயகம் மலர்ந்த பின்னர், "ஹேகியா சோபியா" ஐக்கிய நாடுகள் அவையின் யுனெஸ்கோ அமைப்பின் கீழ் உலகளாவிய பாரம்பரிய சின்னமாக ஆக்கப்பட்டது.

இப்போதும் இந்த ஹேகியா சோபியா கட்டிடத்தின் உள்ளே கிறிஸ்தவ மேரி மாதா படமும் தேவாலய அமைப்பும் காணப்படுகிறது. 

தற்போது துருக்கி நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், '1453 ஆம் ஆண்டில் இஸ்தான்புல் நகரை கைப்பற்றிய இரண்டாம் முகம்மதுவின் உத்தரவின் படி', ஹேகியா சோபியா மசூதியாக நீடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனை காரணமாக காட்டி உடனடியாக மசூதியாக மாற்ற துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது!

நன்றி : இர. அருள் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Durkey govt decide hagia sophia will change as masque


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->