மருந்து பொருட்களின் விலையை அதிரடி குறைப்பு.. மாஸ் காண்பித்த அதிபர் ட்ரம்ப்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாட்டில் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படும் மருந்து பொருட்களின் விலையை கணிசமாக குறைக்கும் நோக்கத்துடன், 4 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக அவர் கூறுகையில், மக்களுடைய மருந்து செலவுகளை பெருவாரியாக குறைக்கும் எண்ணத்துடன் 4 நிர்வாக உத்தரவுகளில் நான் கையெழுத்திட்டுள்ளேன். முதல் நிர்வாக உத்தரவின் படி, சமூக சுகாதார மையங்கள் இன்சுலின் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ பொருட்களுக்கு தள்ளுபடியை நோயாளிகளுக்கு நேரடியாக அணுக வேண்டும்.

இதனால் இன்சுலின் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும். இரண்டாவது உத்தரவாக, மருந்துகளின் விலைகள் குறைவாக இருக்கும் கனடா மற்றும் பிற நாடுகளிடம் இருந்து சட்டபூர்வமான மருந்து இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மூன்றாவது உத்தரவாக கீழ் மருந்து தயாரிப்பாளர்கள், இடைத்தரகர்கள் மற்றும் மருந்தாக மேலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தள்ளுபடி நேரடியாக நோயாளிகளுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நான்காவது உத்தரவாக மத்திய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக முன்னேறிய பிற நாடுகளில் இருந்தும் குறைந்த விலையில் மருந்துகளை வாங்க வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Donald Trump sign prescription Drug Bill


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->