தடுப்பூசி ரெடி ஆகட்டும்.. எல்லாத்துக்கும் நான் கொடுக்கிறேன்.. அதிபர் ட்ரம்ப் நெகிழ்ச்சி பேச்சு.!! - Seithipunal
Seithipunal


சீனாவில் கடந்த வருடத்தின் டிசம்பர் மாதம் பரவ துவங்கிய கொரோனா வைரஸின் தாக்கமானது, 8 மாதங்களாக உலக நாடுகளை ஆட்டிப்படைத்துவிட்டது. இன்னும் கொரோனாவின் தாக்கத்தால் மக்கள் கடுமையான அளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுக்குள் வைக்க, உலக நாடுகள் கடுமையான அளவு போராடி வருகிறது.

உலக நாடுகளின் கொரோனா பாதிப்பு பட்டியலில் அமெரிக்கா முதலில் இருக்கும் நிலையில், இந்த வருடத்தின் இறுதிக்குள் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனை உறுதி செய்யும் விதமாக அமெரிக்க தேசிய சுகாதார அமைப்பு நிறுவனம் தயார் செய்துள்ள தடுப்பூசி இறுதிக்கட்ட பரிசோதனையை எட்டியுள்ளது என்றும், இந்த தடுப்பூசி அமெரிக்காவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும், அனைவரும் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தடுப்பூசி பரிசோதனையில் தடுப்பூசி செலுத்திய நபர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதாகவும், இறுதிக்கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிந்ததும் வர்த்தக ரீதியான தடுப்பூசியை தயார் செய்யும் பணி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த சூழலில், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி தயாரானதும், பிற நாடுகளுக்கு வழங்கப்படும் என்றும், வெண்டிலேட்டர் போன்ற பல மருத்துவ உபகரணங்கள் தயார் செய்து உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும், இதனைப்போன்றே மருந்துகளும் உலகம் முழுவதும் அனுப்பப்படும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Donald Trump says corona drug supply


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->