சரித்திரத்தை உருவாக்குவோம்.. டிரம்ப் அசத்தல் பேட்டி.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்திய ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த நேரத்தில், ட்ரம்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பானது அளிக்கப்பட்டது. இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் பிற மத்திய அமைச்சர்கள் ட்ரம்பை வரவேற்றனர். 

இதன்பின்னர் ட்ரம்பிற்கு முப்படைகளின் சார்பாகவும் அணிவகுப்பு மரியாதையை அளிக்கப்பட்ட நிலையில், இந்த நிகழ்ச்சிகளுக்கு பின்னர் தனது மனைவி மெளனியாவுடன் ராஜ்காட் சென்று காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலியை செலுத்தினர். 

இதனையடுத்து ஐதராபாத் மாளிகைக்கு முன்புறம் இருக்கும் புல்வெளி பகுதியில் பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், ட்ரம்ப் - மோடி முன்னிலையில் சுமார் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. 

இதற்கு பின்னர் இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் ட்ரம்ப் பேசிய சமயத்தில், நானும் - பிரதமர் மோடியும் இஸ்லாமிய பயங்கரவாதத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதில், இருநாட்டிற்கிடையே உள்ள உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளோம். தீவிரவாதத்தை ஒடுக்குவது தொடர்பாக விவாதம் செய்துள்ளோம். 

இரண்டு நாடுகளும் சேர்ந்து சரித்திர சாதனையை கட்டாயம் படைக்கும். விரிவான வர்த்தக ஒப்பந்தத்தில் அதிகளவு கவனம் இருந்தது. பாதுகாப்பான 5 ஜி வயர்லெஸ் சேவை, தொழில்நுட்ப சுதந்திரம், முன்னேற்றம். பாதுகாப்பு தொடர்பாக விவாதித்தோம் என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Donald Trump press meet after speech with improvement relationship with modi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->