விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நபர்.! சிறிதும் யோசிக்காமல் நடுரோட்டிலேயே மருத்துவர்கள் செய்த காரியம்!! - Seithipunal
Seithipunal


பிரித்தானியாவை சேர்ந்தவர் ஜான் ஓ பிரையன். 47 வயது நிறைந்த இவர், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் வாகனம் சுக்குநூறாகி பிரையன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார். இந்த 

இந்த நிலையில் சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் இதுகுறித்து  ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவ ஊழியர்கள,  பிரையனுக்கு அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் முதலுதவி கொடுத்து ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தனர். 

ஆனால் அதற்குள் பிரையனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உடனேயே அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே பிரச்னை உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்ட நிலையில் ஃபாரஸ்ட் என்ற மருத்துவர் மேலான குழு சிறிதும் யோசிக்காமல் நடுரோட்டில் அறுவை சிகிச்சை செய்து அவரது உயிரை காப்பாற்றினர்.

 பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது அதனை தொடர்ந்து பல மாதங்களுக்கு பிறகு, உடல் நலம் தேறிய பிரையன் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

doctors done operation to serious condition patient


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->