கொரோனா நோயாளிகளை வைத்து மருத்துவர்கள் செய்த செயல்.! குவியும் பாராட்டுக்கள்.!  - Seithipunal
Seithipunal


பெய்ஜிங்: சீனாவில் இருக்கும் வுகான் நகரில் கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளுடன் மருத்துவர்கள் நடனம் ஆடி அவர்களை உற்சாகப்படுத்தி இருக்கின்றனர். 

சீனாவில் நிலவிவரும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்து இருக்கின்றது. இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 1483 பேர் இதுவரை உயிரிழந்து இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. 

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 116 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய வுகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஒவ்வொரு நாளும், கொரோனா காய்ச்சலால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் அங்கிருக்கும் நோயாளிகள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். இந்நிலையில், அவர்களுடைய அச்சத்தை போக்கி உற்சாகப்படுத்தும் நோக்கில் நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக மருத்துவர்கள் அவர்களுடன் சேர்ந்து நடமாடி இருக்கின்றனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பாராட்டுகளை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

doctors dance with corona patient


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->