கொரோனா பீதியில் இருந்து தப்பிக்க இதை செய்து பாருங்கள்- உலக சுகாதார நிறுவனம்.!  - Seithipunal
Seithipunal


பெடிமிக் (Pandemic) நிலைமை என்று கூறப்படும் கொள்ளை நோய் சமயத்தில், மன அழுத்தம் ஏற்படுவது மிகவும் தவிர்க்க முடியாத ஒன்று தான். கொரோனா அச்சத்தினால், குழப்பம், சோகம், பயம் ஆகிய உணர்வுகள் சாதாரணமானவைதான் என உலக சுகாதார நிறுவனம் அறிக்கை கொடுத்துள்ளது. 

மேலும், அதிலிருந்து தப்பிக்க சில யோசனைகளையும் கொடுக்கின்றது. அவை, பின்வருமாறு:-

1. டிஜிட்டல் உரையாடல்களில் இருந்து சாட்டிங்கில் பயத்தை அதிகப்படுத்திக்கொள்ளாமல் குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிடுங்கள் என்பதுதான் உலக சுகாதார நிறுவனத்தின் முதல் அறிவுரை.

2. ஏற்கனவே மன ரீதியான குறைபாடுகளுக்காக மருந்துகள் எடுத்துக்கொண்டிருந்தால் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உணவையும், தூக்கத்தையும் சரியான முறையில் வழிப்படுத்தினால், பெரும்பாலான மன ரீதியான அழுத்தத்தில் இருந்து தப்பிக்கலாம்.

3. அரசும், சுகாதார நிறுவனமும் அளிக்கும் வழிமுறைகளையும், விழிப்புணர்வு விஷயங்களையும் மட்டும் எடுத்துக்கொண்டு, புரளிகளையும் வாட்சப் போன்ற சமூகவலைதள வதந்திகளையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

4. மது அருந்தி, புகைபிடித்து இந்த அழுத்தத்தைக் குறைக்க முயற்சி செய்யாதீர்கள். நீங்கள் நீண்டகாலமாக செய்யாமல் இருக்கும் உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு விஷயத்தை மீண்டும் செய்யத் தொடங்குங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do this escape the corona panic 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->