60 ஆண்டு காலத்துக்கு திமுக ஆட்சிக்கு பயமில்லை - அமைச்சர் துரைமுருகன் பேச்சு..! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் அருகே பட்டபுதூரில் இன்று தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைவருமான தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சியின் முன்னோடிகளுக்கு பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட விருதுகளை வழங்கினார். 

இவ்விழாவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர் . முப்பெரும் விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:- 

"ஆட்சியையும் கட்சியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறம்பட செயல்படுத்தி வருகிறார். கருத்து வேறுபாடுகளை தாண்டி பிரதமர் மோடியின் நன்மதிப்பை பெற்றவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திமுகவை யாராலும் அசைக்க முடியாது. 60 ஆண்டு காலத்துக்கு திமுக ஆட்சிக்கும், கட்சிக்கும் பயமில்லை" என்று அவர் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Three grand festival near viruthunagar


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->