இந்த நாட்டிற்கு சென்று., இதனை செய்தீர்கள் என்றால் அவ்வுளவுதான்...!!  - Seithipunal
Seithipunal


இன்றுள்ள காலத்தில் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாகவும்., சில சுற்றுலாவிற்காகவும்., கல்விக்காகவும் நாம் மேலை நாடுகளுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில்., பலர் ஒரு முறையாவது வெளிநாட்டிற்கு சென்று வர வேண்டும் என்ற எண்ணமானது இருக்கும். நமது நாட்டில் உள்ளது போன்றே அனைத்து நாடுகளிலும் சட்டங்கள் செயல்பட்டு வருகிறது. 

வெளிநாடுகளுக்கு செல்லும் போது அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களை நாம் அறிந்திருப்பது அவசியம். ஏனெனில் நமது நாட்டினை போன்று அனைத்து நாடுகளுக்கும் ஒரே சட்டங்கள் இல்லை., அந்தந்த நாட்டின் கலாச்சாரத்தை பொறுத்து சில சட்டங்களில் விலக்கும்., சில செயல்களுக்கு கடுமையான தண்டனையும் நடைமுறையில் உள்ளது. 

அந்த நாடுகளுக்கு செல்லும் போது நாம் அந்த சட்டத்தை கடைபிடிக்க தவறும் பட்சத்தில்., அந்நாட்டு சட்டத்தின் மூலமாக நாம் தண்டனை பெற முடியும். அந்த வகையில்., சில நாட்களில் உள்ள சட்டத்தை பற்றி நாம் இன்று தெரிந்துகொள்வோம். 

countries flag,

பார்சிலோனா:

பார்சிலோனா நாட்டில் நீச்சல் உடையை கடற்கரை பகுதிகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த நீச்சல் உடைகளை கடற்கரை தவிர்த்து பிற இடங்களில் உபயோகம் செய்யும் பட்சத்தில்., சுமார் 100 பவுண்டுகள் அபராத தொகையாக அந்நாட்டு அரசாங்கத்தால் வசூலிக்கப்படும். இந்த அரசாணையானது கடந்த 2011 ம் வருடத்தில் இருந்து அமலுக்கு வந்தது. 

போர்ச்சுக்கல்: 

போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள கடலில் குளிக்கும் போதோ அல்லது வேடிக்கை பார்க்கும் போதோ சிறுநீர் கழிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

beach, beach enjoy, 

சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து: 

சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாட்டில் ஸ்விங்கத்தை சாப்பிட்டு கண்ட இடத்தில் வீசினாலோ அல்லது சாப்பிட்டு துப்பினாலோ அது தண்டனைக்குரிய குற்றம் மற்றும் 400 டாலர் அபராதமும் அந்நாட்டு அரசாங்கத்தால் விதிக்கப்படும். நமது நாட்டினை போன்று ஸ்விங்கத்தை சாப்பிட்டு துப்பினால் தேவையற்று 400 டாலர் அபராதம் செலுத்தவேண்டியிருக்கும். 

பிரான்ஸ்: 

பிரான்ஸ் நாட்டில் இருக்கும் நீச்சல் குளங்களில் கட்டாயமாக நீச்சல் உடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிற உடைகளில் நீச்சல் குளத்தில் குளிக்க கூடாது. 

inner wear, swimming dress, inner wear male, inner wear female,

கஜகஸ்தான் மற்றும் ரஷியா:

கஜகஸ்தான் மற்றும் ரஷிய நாட்டில் தயாரிக்கப்படும் மற்றும் பயன்படுத்தப்படும் அன்றாட உள்ளாடைகளில் சுமார் 6 விழுக்காடு அளவிற்கு கண்டிப்பாக காட்டன் இருக்க வேண்டும். இந்த சட்டமானது உள்ளாடைகளுக்கு மட்டுமல்லாது அனைத்து ஆடைகளுக்கு இது பொருந்தும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

different countries act


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->