காதலிக்கு ப்ரபோஸ் செய்ய சென்ற காதலன்.! இப்படியா ஒரு மரணம் வரணும்.?  - Seithipunal
Seithipunal


அமெரிக்கா லூசியானா மாகாணத்தில் பேடன் ரூஜ் நகரை சேர்ந்த ஸ்டீவன் வெபர் என்பவர் தன்னுடைய காதலி கெனிஷா ஆன்டோயினியுடன் தான்சானியா நாட்டில் இருக்கும் பெம்பா தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கே அவர்கள் கடலில் நீருக்கு அடியில் 32 அடி ஆழத்தில் இருக்கும் மாண்டா என்ற விடுதியில் தங்கியுள்ளனர். 

அப்போது ஸ்டீவன் வெபர், கெனிஷா ஆன்டோயினியிடம் திருமணத்திற்கான ப்ரொபசலை வித்தியாசமாக கவித்துவமாக கேட்க விரும்பி அவர் ஈடுபட்ட செயல் விபரீதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக ஸ்டீவன் வெபர் தண்ணீருக்குள் இறங்கி தான் கைப்பட எழுதிய காதல் கடிதம் ஒன்றையும், திருமண மோதிரத்தையும் கண்ணாடி வழியாக விடுதிக்கு உள்ளே இருந்த காதலியிடம் காட்டியுள்ளார். 

true love, proposal, seithipunal

அந்த கடிதத்தில்  ஸ்டீவன் வெபர் “உன்னைப் பற்றி நான் விரும்பும் அனைத்தையும், உன்னிடம் சொல்லும் அளவுக்கு என்னால் மூச்சு விட முடியாது. ஆனால் நான் உன்னைப் பற்றி எல்லாம் எழுதி இருக்கிறேன், ஒவ்வொரு நாளும் நான் உன்னை அதிகமாக நேசிக்கிறேன்” என எழுதபட்டிருந்தது. 

தனக்காக தண்ணீருக்கு அடியில் சென்று காதலர் செய்யும் கவித்துவ செயல்களால் கெனிஷா மிகவும் உணர்ச்சி பெருக்குடனும், ஆனந்த கண்ணீருடனும் பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். 

true love, proposal, seithipunal

அந்த நேரத்தில் சற்றும் எதிர்பாராத விதமாக ஸ்டீவன் வெபர் தண்ணீரில் மூழ்கியுள்ளார். அவரை விடுதி ஊழியர்கள் காப்பாற்ற உடனடியாக தண்ணீருக்குள் இறங்கினர். இருப்பினும் அதற்குள் ஸ்டீவன் வெபர் மூச்சு திணறி உயிரிழந்து விட்டார்.

கெனிஷா ஆன்டோயினி இந்த தகவலை பேஸ்புக்கில் புகைப்படங்களுடன் பதிவிட்டு, "தன் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான ஒரு நாள் துயரத்தில் முடிந்துவிட்டது." என கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

death when proposing in america Lusitania


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->