கொரோனாவுக்கு பயந்து இப்படி ஒரு காரியத்தை செய்ததால், துடிதுடித்து பறிபோன 27 உயிர்கள்.! - Seithipunal
Seithipunal


சீனாவின் உகான் நகரில் இயங்கி வரும் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் தினமும் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும், தற்போது வரை 3300க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த அவசரமாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இதுவரையில் இந்தியாவில் 40-க்கு மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும், இத்தாலியில் இருந்து இந்தியாவிற்கு சுற்றலா வந்த 16 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

கொரோனா வைரஸ்க்கு மருந்து இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் கொரோனா தாக்காமல் இருக்க என்னவெல்லாம் செய்யலாம் என பலமருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதில் மது அருந்தினாலோ அல்லது மதுவை உடலில் தெளித்துக்கொண்டாலோ கொரோனா வைரஸ் பரவாது என்ற தகவலும் சில நாட்களாக பரவி வருகிறது. ஆனால் இது தவறு என்றும் மதுவினால் கொரோனாவை குணப்படுத்த முடியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது, ஆல்கஹால் கொரோனாவை என்று இணையத்தில் பரவிய வதந்தியை நம்பி ஈரானில் 27 பேர் எரிசாராயம் எனப்படும் மெத்தனாலை குடித்து உயிரிழந்திருக்கின்றனர். இந்த வதந்தியை நம்பி அவர்கள் மெத்தனாலை அதிக அளவில் குடித்து உயிரிழந்ததாக அஸ்வஸ் மருத்துவக்கல்லூரி செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கின்றார். இது போல எத்தனை குடித்துவிட்டு 218 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

death by methanal in iran


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->