ஆற்றை கடக்க முயலும்போது மகளுடன் பரிதமாக இறந்த தந்தை.! பார்ப்போரை  கண்ணீர் வர வைக்கிறது.!! - Seithipunal
Seithipunal


ஆஸ்கார் அல்பெர்டோ தனது கருப்பு சட்டைக்குள் தன் மகளைக் கைகளால் அணைத்தபடி ரியோ கிராண்டே நதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கினார் .தனது மகளின் உயிரைக் காப்பற்ற செல்லும்  முயற்சியில் தனது உயிரையும் இழந்தார்.

அமெரிக்காவுக்கு குடியேறுவதற்காக இவர் சென்றுள்ளார். இவர் மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரைச் சேர்ந்த ஆஸ்கார் அல்பெர்டோ. ஞாயிற்றுக்கிழமை தனது 2 வயது மகளுடன் ஆற்றைக் கடந்து அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டமிட்டார்.

இறுதியில் ஆற்றில் மூழ்கிய ஆஸ்கார் மெக்ஸிகோவின் ரியோ கிராண்டே நதியில் தனது மகளுடன் கரை ஒதுங்கினார். இதை கண்ட அனைவரின் கண்களில் கண்ணீர் வரும் அளவிற்கு இருந்தது அந்த புகைப்படம்.

அவரது மகள் தடுமாறிய விழுந்ததால்  அவரைக் காப்பாற்ற ஆஸ்காரும் விழுந்தார். அவரது மகளைக் காப்பாற்ற நினைத்தார்.ஆனால் இருவரும் ஆற்றில் மூழ்கி இறந்தனர். 

ஜூலியா லி டக் என்ற பத்திரிகையாளர் திங்கட்கிழமை தனது அந்த புகைப்படத்தை  கேமராவில் பதிவு செய்துள்ளார். இது தொடர்பான செய்திகள் மெக்ஸிகோ செய்தித்தாள்களில் வெளியாக்கு உள்ளன.  

இதற்கு முன்  மெக்ஸிகோ உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து ஆண்டுதோறும் சட்டவிரோதமாக மக்கள்  அமெரிக்காவில் குடியேறுகின்றனர். இதைத் தடுக்க சுமார் 670 மைல் தொலைவுக்கு எல்லையில் ஏறிக் கடக்க முடியாத அளவில்  உயரமான சுவரை தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எழுப்பி வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

daughter with father died in america. feeling sad


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->