அணை இடிந்து ஊருக்குள் புகுந்த வெள்ளம்.! 305 பேர் மாயம்., 58 பேர் சகதியில் சிக்கி துடிதுடிக்க பலி.!! கோரத்தாண்டவத்தால் நேர்ந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


பிரேசில் நாட்டில் உள்ள பெலோ ஹாரிசன்டே நகருக்கு தென் மேற்காக அமைத்துள்ளது புருமடின்ஹோ நகரம்.  இந்த நகருக்கு அருகில் இருக்கும் பகுதியில் இருப்பு தாது சுரங்கமானது செயல்பட்டு வந்தது. இந்த பகுதிக்கு அருகில் பழைய அணையானது பயன்படுத்தப்படாத நிலையில் இருந்து வந்தது. 

அங்கிருந்த நிலக்கரி சுரங்கத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில்., உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை திடீரென அணையானது இடிந்து அதில் உள்ள நீரெல்லாம் பெருக்கெடுத்து ஓடியது. 

இந்த சம்பவத்தில் அணையில் இருந்த நீர் அனைத்தும் பெருக்கெடுத்து ஓடி., அங்குள்ள விளைநிலங்கள் மற்றும் சாலைகளில் புகுந்து ஓடியது. இந்த விபத்தில் அங்கிருந்த பாலங்கள்., இல்லங்கள் மற்றும் வாகனகினால் மண்ணில் புதையுண்டன. 

சுரங்கத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் சுமார் 100 பேர் வரை காப்பாற்றப்பட்ட நிலையில்., 50 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியாகியுள்ளதாகவும்., சுமார் 150 பேரை காணவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் நேற்று வெளியானது. 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை ஹெலிகாப்டரின் உதவியுடன் மேற்கொண்டு வந்தனர். இன்றைய நிலவரப்படி சுமார் 58 மக்கள் மொத்தமாக பலியாகியுள்ளதாகவும்., 305 பேர் மயமாகியுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

இந்த பேரிடரில் சிக்கி தவித்த சுமார் 23 பேர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போன 305 பலர் சகதியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dam collapsed in Brazil peoples died 58 and missing peoples 305


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->