மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு.. அரசு அதிரடி அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 100-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 11,190,678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த வைரசால் 529,113 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 6,297,910 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது.

நேபாளத்தில் கொரோனா வைரசால் 15,259 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். 6,143 பேர் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், நேபாளத்தில் ஜூலை 22ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 90% வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள். பெரும்பாலும் அவர்கள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர். நேபாளத்தில் உள்ள 77 மாவட்டங்களில் 75 மாவட்டங்களில் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது என்றும் நேபாள அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

curfew extension in nepel till july 22


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->