ரஷ்யாவை வீழ்த்தி விடலாம் என நினைப்பது முட்டாள்தனம் - குரோஷியா அதிபர் - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி தொடங்கி, தற்பொழுது 341வது நாளை எட்டியுள்ளது. போரில் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இப்போர் தொடங்கியதிலிருந்து ரஷ்ய தாக்குதலை சமாளிக்க மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி உதவி வருகின்றன. இதனால் போர் முடிவு பெறாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சு வார்த்தைக்கு திரும்ப இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள அதி நவீன பீரங்கிகளை வழங்குமாறு உக்ரைன் அதிபர் கோரிக்கை விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து உக்ரைனின் கோரிக்கையை ஏற்று மேற்கத்திய நாடுகள் அதிநவீன ராணுவ பீரங்கிகளை வழங்க முன்வந்துள்ளன.

இதனால் போர் மேலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேட்டோ அமைப்பில் உறுப்பினரும், ஐரோப்பிய நாடுமான குரோஷியாவின் அதிபர் ஷொரன் மிலனொவிக் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவரிடம் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அதிநவீன டாங்கிகள் வழங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த குரோஷியா அதிபர் வழக்கமான போரில் ரஷ்யாவை வீழ்த்த நினைப்பது முட்டாள்தனமானது என்றும், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நான் எதிர்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதன் நோக்கம் என்ன? ரஷ்யாவை சிதைப்பதா? ரஷ்ய அரசை மாற்ற நினைப்பதா? நோக்கம் தெளிவாக இல்லாத நிலையில் ஆயுதங்கள் வழங்குவது முட்டாள்தனமானது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Croatia president says it is follish to think Russia can be defeated


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->