உடல் ஆரோக்கியத்துடன், வலிமையாக இருக்க சாப்பிட்ட உணவால், பரிதாபமாக உயிரை பறிகொடுத்த தம்பதியினர்!! - Seithipunal
Seithipunal


தற்போதைய காலத்தில் உடல்நலத்துடன்  இருக்க பலரும் ஒவ்வொரு புதிய வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். மேலும் பலர்  நம் உடல் நலனுக்கான மருத்துவம் என யார் என்ன  ஐடியா கூறினாலும் தவறாமல் பின்பற்றி வருகின்றனர்.

அதனைபோலவே  மங்கோலியாவைச் சேர்ந்த தம்பதியினர்  உடல் நலனுக்காக எடுத்துக்கொண்ட உணவு அவர்களது  உயிரையே பறித்துள்ளதுபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மங்கோலியா மற்றும் ரஷ்யாவின் எல்லைப்பகுதியில் சகானூர் எனும் சிறிய நகரம் உள்ளது. இந்நகரத்தில் வசிக்கும் தம்பதியினர் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க அணிலை பச்சையாக சாப்பிடுவது நல்லது என சிலர் கூறுவதை கேட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து அவர்கள்  கடந்த வாரம், மர்மூத் எனும் ஒரு வகை அணிலை பிடித்து சமைக்காமல் அதன் உடற்பாகங்கள் அனைத்தையும் உண்டுள்ளனர். 

இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் அவர்களுக்கு உடல் சோர்வு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.  பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களை பரிசோதனை செய்து பார்த்ததில் அவர்கள் இருவருக்கும் பிளேக் இருப்பது தெரிய வந்துள்ளது. 

அதன் பின்னர் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில் தொடர்ச்சியாக இருவரும்  பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

couple dead eating squirrel


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->