உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் கோரா தாண்டவம்! சன்டே அப்டேட்!  - Seithipunal
Seithipunal


உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. உலக அளவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 3.09 கோடியாக உயர்ந்துள்ளது, 

இன்று காலை நிலவரப்படி, உலக அளவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 3,09,83,958 உள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலகம் முழுவதும் 9,61,400 பேர் உயிரிழந்துள்ளனர்.

74,39,220 பேர் கொரோனா தொற்றுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 2,25,83,338 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 61,386 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பில் மற்றும் உயிரிழப்பில் உலகளவில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 69,67,433 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,03,824 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். 

இரண்டாவது இடத்தில் இந்தியா 53,98,230 கொரோனா தொற்று பாதிப்புகளுடன் உள்ளது, கொரோனாவினால் உயிரிழப்பு எண்ணிக்கை 86,774 அக உயர்ந்துள்ளது. அடுத்தபடியாக பிரேசிலில் 45,28,347 பேரும், ரஷியாவில் 10,97,251 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CORONA WORLD WIDE UPDATE SEP 20


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->