உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம்! - Seithipunal
Seithipunal


203 நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதில், அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா போன்ற நாடுகளில் கொரோனா தொற்று பரவல் மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, உலக அளவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,06,91,801 தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் 74,00,874 பேர் கொரோனா தொற்றுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு உலகம் முழுவதும் இதுவரை 956,421 பேர் உயிரிழந்துள்ளனர், 

கொரோனா தொற்றில் இருந்து 2,23,34,506 பேர் மீண்டுள்ளனர். 61,405 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 2,23,34,506 பேர் பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 

அமெரிக்காவில் 69,25,941-க்கும் மேற்பட்டோர் கொரோனவினால் பாதிக்கப்பட்டுள்ளனர், அமெரிக்காவில் இதுவரை 2,03,171 பேர் கொரோனவினால் உயிரிழந்துள்ளனர். இரண்டாவது இடத்தில இந்தியா உள்ளது. மொத்த தொற்று 53,05,475 ஆக உள்ளது, இந்தியாவில் உயிரிழப்பு 84,372 ஆக உயர்ந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona world wide update sep 19


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->