சீனா கொரோனாவில் பல விஷயங்களை மறைத்துவிட்டது.. அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த சீன விஞ்ஞானி பரபரப்பு தகவல்.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள யூகான் நகரில் முதல் முறையாக கொரோனா வைரசானது கண்டறியப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கட்டுப்படுத்த இயலாமல் பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்கா போன்ற பெரிய நாடுகள், இந்த வைரஸின் கோரப் பிடியில் சிக்கியுள்ளது. 

இந்த வைரசுக்கு மருந்து கண்டறியும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரையில் தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள சூழ்நிலையில், அமெரிக்கா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகளில் கொரோனாவின் பரவலானது கடுமையான அளவு உச்சம் பெற்றுள்ளது. 

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பற்றிய தகவல் முன்னரே சீன அரசுக்கு தெரியும் என்று சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானி தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் இருக்கும் ஹாங்காங் வைராலஜி நோய் தடுப்புத் துறையில் பணியாற்றி வரும் லீமா யாங் என்ற பெண் விஞ்ஞானி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இப்போது நான் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்துள்ளளேன். கடந்த டிசம்பர் மாதமே கொரோனா குறித்து சீன அதிகாரிகளுக்கு பல விஷயம் தெரியும். டிசம்பரிலேயே சீனா இது குறித்து கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்திருந்தால், மக்களின் உயிர்களை காப்பாற்றியிருக்கலாம். 

சீனாவில் ஆராய்ச்சி செய்ய ஹாங்காங் உள்ளிட்ட வெளிநாடுக்கு அனுமதி அளிக்க அந்த நாட்டு அரசு முதலிலேயே மறுத்து விட்ட நிலையில், டிசம்பர் 31 ஆம் தேதியே எனது தோழி கொரோனா மனிதர்களிடம் இருந்து பரவும் என்பதை கண்டறிந்தார். இதனை நான் மக்களுக்கு எடுத்துரைக்க விரைந்த நிலையில், சீனா என்னையும் முடக்க நினைத்தது. 

சீன அரசிடம் நான் மீண்டும் பிடிபட்டால், மோசமான சிறையில் அடைக்கப்பட்டு இருப்பேன். பிறரைப் போல நானும் காணாமல் போயிருப்பேன். கொரோனா விஷயம் தொடர்பாக பல உண்மைகளை சீனா மறைத்துள்ளது. அதனை உலகத்திற்கு தெரியப்படுத்தவே, நான் அமெரிக்காவிற்கு வந்து தஞ்சம் புகுந்துள்ளேன் என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona virus shock update by Chinese Scientist


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->