முகக்கவசத்தில் கரோனா எவ்வுளவு நாட்கள் உயிர் வாழும்?... புதிய ஆய்வில் வெளியான பகீர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸானது முகக்கவசத்தில் 7 நாட்கள் வரை உயிர் வாழும் என்றும், ரூபாய் நோட்டுகள் மற்றும் எவர்சில்வர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்களின் மீது சில நாட்கள் உயிர் வாழலாம் என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இதனைப்போன்று, வீடுகளில் இயல்பாக உபயோகம் செய்யப்படும் கிருமி நாசினிகள் மற்றும் பிளீச்சிங் பவுடர்கள், சோப்கள் போன்றவை வைரஸை எளிதில் கொண்டு விடலாம் என்பதும் தெரியவந்துள்ளது. 

மேலும், அச்சடிக்கப்பட்ட காகிதம், டிசு பேப்பர் போன்றவற்றில் குறைந்தது 3 மணிநேரத்திற்கு, மரப்பலகை மற்றும் துணிகளில் இரண்டு நாட்கள் வரையிலும் உயிருடன் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியும் நபர்கள், முகக்கவசத்தின் வெளிப்புறத்தில் தொடாமல் இருப்பது பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைப்போலவே, அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் பிளாஸ்டிக் மற்றும் எக்கு பொருட்களில் 72 மணிநேரம் வரை உயிருடன் இருப்பதை கண்டறிந்ததும், தாமிரத்தில் 4 மணிநேரத்திற்கு மேல் உயிருடன் இல்லை என்பதையும், அட்டை பெட்டியில் 24 மணிநேரத்திற்கு மேலாக உயிருடன் இல்லை என்பதையும் கண்டறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona virus live 1 week using mask


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->