கோழிக்கறியில் கொரோனா வைரஸ்.. சீனா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய, கொரோனா வைரஸ் தற்போது உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. தற்போது, அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளது. 

இந்நிலையில், சீனாவின் சென்ஷென் நகரில், பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. பிரேசிலில் இருந்து சென்ஷென் நகருக்கு கோழி இறைச்சி வந்துள்ளது. அதை சோதனை செய்த அதிகாரிகள், கொரோனா வைரஸ் இருப்பதை உறுதி செய்தனர். 

இதையடுத்து, அந்த சரக்குப் பெட்டகத்தில் வந்த கோழி இறைச்சிகளில் கொரோனா வைரஸ் இருப்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து கண்டுபிடித்தனர். அத்துடன் வந்த மற்ற இறைச்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது அவற்றில் கொரோனா வைரஸ் இல்லை என தெரியவந்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களை பற்றிய மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அவற்றை நன்கு சமைத்த பிறகு சாப்பிட வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இறக்குமதி செய்யப்படும் உணவு வகைகளை, தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona virus in chicken


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->