உலக நாடுகளை நிலைகுலைய வைத்த கரோனா வைரஸ்! உடல்நிலை மோசமான நிலையில் இங்கிலாந்து பிரதமர்!!  - Seithipunal
Seithipunal


சீனாவில் நகரில் முதன் முதலில் தோன்றிய கரோனா வைரஸ் அங்கு 3331 பேரை பலி வாங்கியது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் இந்த வைரசின் தாக்குதலால் கடும் அவதிக்குள்ளாகினர் தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. 

ஆனால் பிற நாடுகளில் தனது கொடூர முகத்தை காட்ட தொடங்கி உள்ளது இந்த கரோனா வைரஸ். இத்தாலி, ஸ்பெயின், ஈரான், அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா என உலகின் 203 நாடுகளில் இந்த கரோனா வைரஸ் பரவியுள்ளது. 

இந்த நிலையில் இந்தியாவில் இந்த கொடிய வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4,281 ஆக உயர்ந்து, 111 பேர் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் 13,45,653 பேருக்கு இந்த வைரஸ் பரவி சுமார் 74,644 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 10 லட்சத்திற்கும் மேலானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 2,78,413 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பினார். நாளுக்கு நாள் வேகமாக பரவி வரும் இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் உலகம் முழுவதும் நிலைகுலைந்து உள்ளது. 

இதனை தொடர்ந்து உலக தலைவர்களில் இந்த வைரஸில் பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலை மோசமாக உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல்நிலை குறித்து அந்நாட்டு மக்கள் அனைவரும் கவலை அடைந்துள்ளனர். மேலும் பிரதமர் மோடி உட்பட அமெரிக்க அதிபரிடம் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இங்கிலாந்து பிரதமருக்கு விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona virus affected England prime minister in serious condition


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->