காற்றின் மூலம் பரவும் கொரோனா.. அதிர்ச்சி கொடுத்த உலக சுகாதார அமைப்பு.!! - Seithipunal
Seithipunal


உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் திணறி வருகின்றனர். மேலும் கொரோனா வைரஸ் அழிக்க தடுப்பூசி தயாரிக்கும் பணிகளில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

தற்போது கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுமா? பரவாதா? என்ற சர்ச்சை தற்போது நிலவி வருகிறது. 32 நாடுகளில் சேர்த்த 239 விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஒரு ஆய்வின் கொரோனா வைரஸ் காற்றில் மிதக்கும் தன்மை கொண்டது என்றும் காற்றின் மூலம் பரவும் என்றும் கூறப்பட்டது. 

ஆனால் உலக சுகாதார நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் மீண்டும் இதை உறுதிப்படுத்தி உள்ளது. 

இந்நிலையில், 200க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் உலக சுகாதார அமைப்புகளுக்கு திங்கள்கிழமை எழுதிய கடிதத்தின் மூலம் கொரோனா வைரஸ் காற்றில் பரவும் அபாயத்தை இந்த அமைப்பு அலட்சியம் செய்வதாக குற்றம் சாட்டினர். இதையடுத்து காற்றின் மூலம் கொரோனா பரவும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாதுகாப்பு குறித்த அந்த அமைப்பின் வழிகாட்டுதல்களில் பெரும் மாறுதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona transmitted by air


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->