வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்ற, இலங்கை ராணுவத்துக்கு பல்கலைக்கழக பேராசிரியை அளித்த பரிசு!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த 21–ந் தேதி  ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்தவர்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாடினார்கள்.  ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில்  உள்ள கொழும்பு கொச்சிக்கடை கிறிஸ்தவ தேவாலயத்திலும் நீர்கொழும்புவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திலும்  சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றது. அப்பொழுது அங்கு திடீர் குண்டுவெடிப்பு  நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து, அடுத்த சில நிமிடங்களில் கொழும்பு நகரில் தி ஷாங்கரிலா, சின்னமன் கிராண்ட், தி கிங்க்ஸ் பெரி ஆகிய 3 ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும், கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சீயோன் தேவாலயத்திலும் குண்டுகள் வெடித்தன.

அதில் இதுவரை மொத்தம் 300 க்கும் அதிகமான பேர் பலியானர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

உலகையே அதிர வைத்த இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னரும், இலங்கையில் தொடர்ந்து அமைதியற்ற சூழலே நீடித்து வருகிறது. மேலும் தொடர்ந்து அங்கு பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டு வருவதாலும், அதுகுறித்த வதந்திகள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்ததாலும்  மக்கள் நாள்தோறும் அச்சத்தில் வாழ்ந்து வரும்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியையான ஷிரு விஜெமானே என்பவர், தான் வளர்த்து வந்த 5 நாய்களை, வெடிகுண்டுகளை கண்டறியும் பணிக்கு பயன்படுத்தி கொள்ள ராணுவத்துக்கு பரிசாக வழங்கி உள்ளார்.

 இலங்கை ராணுவத்தின் உயர் அதிகாரி பிரிகேடியர் ஏ.என்.அமரசேகராவிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் இந்த 5 நாய்களும் ஜெர்மன் ஷெப்பர்டு இனத்தை சேர்ந்தவை. தாய் நாய்க்கு 2 வயதும், மற்ற நாய்களின் வயது 6 மாதங்களும் ஆகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college lecturer ift dogs to find the bomb in srilanka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->