இந்த வகை மாஸ்க்குகள் தான்.. நோய்ப்பரவலை தடுக்கும்.. ஆராய்ச்சி முடிவு.!  - Seithipunal
Seithipunal


பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தால் மட்டுமே கொரோனாவை 90% தடுக்க முடியும் என்று உலக விஞ்ஞானிகளின் கருத்து கூறுகின்றனர். அதற்கேற்றது போல தற்போது மாஸ்க் அணிய வேண்டும் என மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் ஏற்பட்டிருக்கின்றது.

ஏற்கனவே நடத்திய ஆய்வில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதில் N-95 மற்றும் மருத்துவ முக கவசங்கள் சிறப்பாக இருப்பதாக கூறப்பட்டது. இத்தகைய நிலையில், தற்போது வீடுகளில் தயாரிக்கப்படுகின்றன. முகக்கவசங்கள் சிறப்பாக இருப்பதாக அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

வீட்டில் தயாரிக்கப்படும், முகக்கவசங்கள் காற்றில் எச்சில் மூலமாக பரவும் கொரோனா வைரஸ்களை தடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது என விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்து இருக்கின்றனர். குறிப்பாக பேசும் பொழுது, இருமும்போது, தும்மும்போது வெளிப்படுகிற நீர்த்திவலைகளை தடுப்பதில் வீட்டில் தயாரிக்கப்படும் முகக்கவசங்கள் மிகவும் சிறந்தது. 

சிங்கிள் லேயரில் தயாரிக்கப்படுகின்ற முக்கவசங்கள் கூட இந்த நீர்த்திவலைகளை தடுக்கும் என்று தெரிய வந்துள்ளது. மேலும், 2 அல்லது 3 லேயர் கொண்ட துணி மாஸ்க்குகள், பனியன் துணியில் செய்யப்படுகின்றன, மாஸ்க்குகள் நீர்த்திவலைகளை தடுப்பது தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cloth mask ban corona virus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->