பீஜிங்கில் ராமாயண நடன நாடகத்தை அரங்கேற்றிய சீன கலைஞர்கள்..!
Chinese artists staged a Ramayana dance drama in Beijing
பிரபல சீன அறிஞர் மறைந்த பேராசிரியர் ஜி சியான்லின் எழுதிய ராமாயணத்தின் மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு நடன நாடகமான ''ஆதி காவ்யா-முதல் கவிதை''யை சீன நடனக் கலைஞர்கள் குழு அரங்கேற்றியுள்ளது.
இது குறித்து இந்திய துாதரகம் பதிவிட்டுள்ளதாவது: சீன பரதநாட்டிய நிபுணர் ஜின் ஷான்ஷான் இயக்கிய இந்த நாடகம், 50-க்கும் மேற்பட்ட திறமையான உள்ளூர் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு, பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை காண திரண்டு வந்த பார்வையாளர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர்.
இந்த நடன நாடகம் இரண்டாவது முறையாக நடத்தப்பட்டுள்ளது. இந்த வரலாற்று நிகழ்ச்சி முதன் முதலில் கடந்த ஜனவரி-2025-இல் ஷூனி கிராண்ட் தியேட்டரில் நடைபெற்றது.'' என்று இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.
English Summary
Chinese artists staged a Ramayana dance drama in Beijing