தன் வினை தன்னை சுட்டது?.. சீனாவின் பயோ வெப்பன் கரோனோ??...! வெளியான பகீர் தகவல்..!! - Seithipunal
Seithipunal


சீனாவின் வூஹான் நகரில் பரவியுள்ள கோரனோ வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாளுக்கு அதிகரித்து வருகின்றது. தற்போது கோரனோ வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. 

அந்தநாட்டில் இந்த நோயிக்கு இரண்டாயிரத்து 700க்கும் மேற்பட்டோருக்கு இந்நோயின் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 5 பேருக்கு இந்நோய்க்கூறு பரவியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கு கோரனோ வைரஸ் பரவிஇருப்பதையடுத்து பல்வேறு விமான நிலையங்களில் மருத்துவ சோதனை முகாம்கள் அமைக்கப்பட்டு பயணிகளை பரிசோதித்து வருகின்றனர். உலகின் பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் குறித்த பதற்றம் அதிகரித்து வருகிறது.

சீனாவின் வூஹானில் நகரில் உள்ள அமெரிக்கர்களை சான்பிரான்சிஸ்கோவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை சீன அரசு தொடங்கியுள்ளது. இதனால் அங்குள்ள இந்திய மாணவர்களும் நாடு திரும்பும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

மேலும், தற்போது வரை 80 பேர் கரோனோ வைரஸிற்கு பலியாகியுள்ள நிலையில், சுமார் 3000 பேருக்கு இந்நோயின் அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சீனாவின் கரோனோ வைரஸின் தாக்கத்திற்கு உலக நாடுகளுக்கு தெரியாது சீனா தயாரித்த பயோ ஆயுதம் என்ற குற்றசாட்டு மற்றும் சந்தேகம் எழுந்துள்ளதாக இஸ்ரேல் விஞ்ஞானி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய உயிரியல் விஞ்ஞானி மற்றும் இஸ்ரேல் இராணுவ புலனாய்வு பிரிவு முன்னாள் அதிகாரி டேனி தெரிவித்த சமயத்தில், சீன அரசு மறைமுகமாக உலக நாடுகளுக்கு எதிராக பயோ ஆய்வு கூடத்தை உருவாக்கி, உயிரை கொள்ளும் நோயை உருவாக்கி வந்துள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக உலக நாடுகளால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சீன அரசு மறுப்பு தெரிவித்த நிலையில், ஆய்வக கட்டுரையின் கீழ் இத்தகவல் எனக்கு தெரியவந்ததை அடுத்து, இப்படியாக உருவாக்கப்பட்ட வைரஸாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த நோய் அங்கு பணியாற்றி வந்த மருத்துவர்கள் மற்றும் ஆய்வக கசிவின் காரணமாக பரவியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளார். தன்னிடம் இதற்கான ஆதாரங்கள் இப்போது இல்லை என்று தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

china underworld bio research reason for corona virus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->